Youtube பயனர்களுக்கு ஆப்பு..!! இனி இந்த தவறை செய்தால் ஆடியோ கேட்காது..!! நிறுவனம் அதிரடி..!!
யூடியூப்-களில் ஷார்ட்ஸ் பார்ப்பது தான் பலரது பொழுதுபோக்காக உள்ளது. ஆனால், நீளமான வீடியோக்களை பார்க்கும்போது, விளம்பரங்கள் நடுவே வந்தால், நமக்கு கடுப்பாகும். இதனை தவிர்க்க சிலர் விளம்பரத்தை ஸ்கிப் செய்வார்கள். இன்னும் சிலர், அடுத்தகட்ட AdBlocker-ஐ பயன்படுத்துவர். இவர்களுக்கு யூடியூப் நிறுவனம் அதிரடி ஆப்பை வைத்துள்ளது.
அதன்படி, AdBlocker பயன்படுத்தும் பயனர்களுக்கான வீடியோக்களில் ஆடியோ வசதியை துண்டிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் AdBlocker பயன்படுத்தும் பயனர்கள் ஆடியோ இல்லாமல் தான் வீடியோக்களை பார்க்க முடியும். இனியாவது ஆட் பிளாக் பயனர்கள் யூடியூபின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி யூடியூப் செயலியை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக ஆட்பிளாக்கர்களை பயன்படுத்தும் பயனர்கள் முழுமையாக வீடியோக்களை பார்ப்பதற்கு வழியின்றி யூடியூப் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Read More : மாஸாக வெளியான ‘புஷ்பா2’ படத்தின் இரண்டாவது பாடல்..!! வீடியோ உள்ளே..!!