முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிடிஎஃப் வாசனுக்கு ஆப்பு..!! மஞ்சள் வீரன் கதாநாயகனாக களமிறங்கிய கூல் சுரேஷ்..!!

'What you think is what you think. Wait and see,' he said.
07:36 AM Oct 15, 2024 IST | Chella
Advertisement

தன்னை 'மஞ்சள் வீரன்' திரைப்படத்தில் இருந்து தூக்கியது துரோகம் என்று டிடிஎஃப் வாசன் வீடியோ பேசி வெளியிட்டிருந்தார். அதற்கு மஞ்சள் வீரன் இயக்குநர் செல்அம், டிடிஎஃப் வாசன் அடிக்கடி ஜெயிலுக்கு செல்வதும், தனது காதலியுடன் ஊர் சுற்றிக்கொண்டு, ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால், அவரை படத்தில் இருந்து தூக்கினோம். அவர் தற்போது என்னைப் பற்றி வீடியோவில் பேசி தற்போது 3 லட்சம் வரைக்கும் சம்பாதித்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

Advertisement

இது ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கூல் சுரேஷ் கமிட் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோவில், மஞ்சள் வீரன் படக்குழுவினருடன் மாலை போட்டுக்கொண்டு பேசிய கூல் சுரேஷ், "நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான். உங்கள் மனதிற்குள் நினைப்பீர்கள் அல்லவா அதுதான். விரைவில் உங்களுக்கு செய்தி வரும் Wait and see என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல்அம்மின் மீது பூ தூவி, மஞ்சள் வீரனே வா… மகாதேவனே வா என்று கூல் சுரேஷ் பாடியிருக்கிறார். இதுதொடர்பான அடுத்த வீடியோவில் மஞ்சள் வீரன் திரைப்படத்தின் கதாநாயகன் கூல் சுரேஷ் தான் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More : அரசுப் பள்ளி மாணவிகள் சிகரெட் புகைக்கும் அதிர்ச்சி வீடியோ..!! பஸ் ஸ்டாண்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Tags :
இயக்குனர் செல்அம்கூல் சுரேஷ்மஞ்சள் வீரன்
Advertisement
Next Article