40 முதல் 50 சதவீதம் துல்லியமாக வழங்கப்படும் வானிலை ஆய்வு அறிக்கை...! மத்திய அரசு தகவல்
சமீபத்திய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், மாற்றியமைக்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த ஐந்து ஆண்டுகளில் கனமழை, மூடுபனி, வெப்பம் / குளிர் மற்றும் இடியுடன் கூடிய மழை போன்ற அனைத்து கடுமையான வானிலை நிகழ்வுகள் குறித்த முன்னறிவிப்புகளின் துல்லியத்தில் 40 முதல் 50 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. வானிலை கண்காணிப்புகள், தகவல்தொடர்புகள், மாடலிங் கருவிகள் மற்றும் முன்கணிப்பு அமைப்புகளை அமைச்சகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
கடுமையான வானிலை நிகழ்வுகளை கணிக்க இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. திறமையான, பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் தொடக்க எச்சரிக்கை சேவைகளை வழங்க, பொதுவான எச்சரிக்கை நெறிமுறை, மொபைல் பயன்பாடுகள், இணையதளங்கள், மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் உள்ளிட்ட சமீபத்திய முறைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகிறது.
சமீபத்திய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், மாற்றியமைக்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.