For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்”..!! தவெக தலைவர் விஜய் பதிவு..!!

Let us all pledge to walk the path of true social justice guided by Periyar to establish an intelligent and egalitarian society.
02:55 PM Dec 24, 2024 IST | Chella
”பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதி ஏற்போம்”     தவெக தலைவர் விஜய் பதிவு
Advertisement

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், இன்று பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பெரியார் குறித்த நினைவுகளை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் தனது சமூக வலைதளத்தில் பெரியார் குறித்து பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதில், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

https://twitter.com/tvkvijayhq/status/1871442933104455916

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதி ஏற்போம்" என்று பதிவிட்டுள்ளார். மீண்டும் பனையூரில் உள்ள தனது அலுவலகத்திலேயே பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்தியதாகவும், பெரியார் நினைவிடத்திற்கு செல்லாதது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : ”ஹமாஸ் தலைவரை கொன்றது நாங்கள்தான்”..!! பகிரங்கமாக அறிவித்த இஸ்ரேல்..!!

Tags :
Advertisement