முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகத்தில் பிரதமரின் அந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்... முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

We will not implement the Prime Minister's Vishwakarma scheme.
06:05 AM Nov 28, 2024 IST | Vignesh
Advertisement

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்: இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு, கடந்த ஜன 4-ம் தேதி தமிழக அரசு சார்பில் நான் கடிதம் எழுதியிருந்ததை நினைவூட்டுகிறேன்.

Advertisement

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, இத்திட்டத்தில் மாற்றங்களை செய்ய பரிந்துரைத்துள்ளது. அவற்றை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும். அதற்கு பதில், வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின்கீழ் உதவி பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பை 35-ஆக உயர்த்தலாம். இதனால் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதனை நன்கறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும். கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து, கடந்த மார்ச் 15-ம் தேதி வரப்பெற்ற பதிலில், பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லாது .இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின்கீழ் தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்த உள்ள இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும். இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
mk stalinmoditn governmentVishwakarmaVishwakarma scheme
Advertisement
Next Article