For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மாட்டோம்" - ஹோட்டல் அசோசியேசன் அதிரடி முடிவு! 

01:05 PM May 05, 2024 IST | Mari Thangam
 கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மாட்டோம்    ஹோட்டல் அசோசியேசன் அதிரடி முடிவு  
Advertisement

கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மாட்டோம் என ஹோட்டல் ரிசார்ட்ஸ் அசோசியேசன் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலில் இருந்து தப்பிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றம் வரும் 7ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவித்திருந்தது.

இதற்கு, கொடைக்கானல் மலைப்பகுதியில் வியாபாரம் மர்றும் ஹோட்டல் நடத்துபவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஹோட்டல் ரிசார்ட் உரிமையாளர் சார்பில், தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, அவர்கள் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், கொடைக்கானலுக்கு வாகனங்களில் வர இ - பாஸ் கட்டாயம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும் எனக் கூறப்படுகிறது. அதனால்  இந்த ஆண்டு கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவே வருவார்கள். சீசன் வருமானத்தில் தான் நாங்கள் வாங்கிய கல்விக்கடன், வாகணக்கடன் உள்ளிட்ட பிற அனைத்து கடன்களையும் அடைக்க முடியும்.

எனவே, தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு இந்த வழக்கை மேல் முறையீடு செய்ய வேண்டும். கார்பார்க்கிங் வசதியை அதிகப்படுத்தி போக்குவரத்து காவலர்களை சீசனில் அதிகப்படுத்தி போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள் முன்வர வேண்டும்.

கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் கருதி நீதியரசர்கள் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். வரும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து இ-பாஸ் ரத்து செய்ய மனு கொடுக்க உள்ளோம். இதில் சுமூக உடன்பாடு கிடைக்கவில்லை எனில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் அதே போல உணவும் வழங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement