For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்... திமுக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்த அன்புமணி...!

We will mobilize the people and hold a protest... Anbumani warns the DMK government
10:31 AM Jan 13, 2025 IST | Vignesh
மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்    திமுக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்த அன்புமணி
Advertisement

பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இராம்சர் தலம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை நீரை உறிஞ்சி வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணியை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் செய்கிறது. 115 வகையான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள், 9 ஊர்வன வகைகள், 46 வகை மீன்கள், 5 வகையான ஒட்டு மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள் போன்றவற்றின் வாழிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது.

அதை ஒட்டிய பகுதிகளில் குப்பை எரி உலை அமைக்கப்பட்டால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும். இத்திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது ஆகியவை தான் தீர்வு ஆகும். இதை உணர்ந்து பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாமக நடத்தும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement