For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இஸ்ரேலை விரைவில் அழிப்போம்.. நீண்ட போருக்கு தயார்..!! - ஹிஜ்புல்லா புதிய தலைவர் சபதம்

We will continue to fight against Israel...Hizbullah new leader Naeem Qasim vows
06:59 PM Sep 30, 2024 IST | Mari Thangam
இஸ்ரேலை விரைவில் அழிப்போம்   நீண்ட போருக்கு தயார்        ஹிஜ்புல்லா புதிய தலைவர் சபதம்
Advertisement

ஹிஸ்புல்லாக்களுடன் நடந்து வரும் சண்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்த நிலையில், இஸ்ரேல் அதனை திட்டவட்டமாக நிராகரித்து. மேலும், இரு தரப்பினரும் 21 நாட்களுக்கு மோதலை நிறுத்தி வைப்பதற்காக அமெரிக்காவும் பிரான்ஸும் கூட்டாக முன்வைத்த செயல்திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்கவில்லை.

Advertisement

ஆயிரக்கணக்கான பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடா்பு சாதனங்கள், சூரிய மின்சார சாதனம் போன்ற பிற சாதனங்களில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த அக். 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக தங்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக உறுதியாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹிஜ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளி கிழமை தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதனை ஹிஜ்புல்லா அமைப்பும் நேற்று முன்தினம் உறுதி செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், எதிரிக்கு எதிரான புனித போரைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என அந்த அமைப்பு உறுதிமொழி எடுத்திருந்தது.

நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், ஹிஜ்புல்லா அமைப்பின் துணை தலைவராகவும் நயீம் காசிம் செயல்பட்டு வருகிறார். நஸ்ரல்லா படுகொலைக்குப் பின்னர் தொலைக்காட்சியில் தோன்றி அவர் முதன்முறையாக இன்று பேசும்போது, இஸ்ரேல் தரைவழியே தாக்குதல் நடத்த முடிவெடுத்து விட்டால், லெபனானை பாதுகாக்க, போராட ஹிஜ்புல்லா அமைப்பின் போராளிகள் தயாராக உள்ளனர் என்றார்.

கடந்த சில மாதங்களாக ஹிஜ்புல்லா அமைப்பின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டு வரும் சூழலில், புதிய தளபதிகளை ஹிஜ்புல்லா அமைப்பு நம்பியிருக்கிறது என்றார். எங்களுடைய ராணுவ திறன்கள்மீது இஸ்ரேலால் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. துணை தளபதிகள் உள்ளனர். எந்தப் பதவியிலாவது உள்ள தளபதி ஒருவர் காயமடைந்து விட்டால் அவருக்குப் பதிலாக வேறொருவர் உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம் என உறுதி கூறிய அவர், நீண்ட போருக்குத் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

Read more ; விவாகரத்தில் உடன்பாடில்லை.. ஜெயம் ரவியுடன் வாழவே விரும்புகிறேன்..!! – ஆர்த்தி

Tags :
Advertisement