'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ்.? ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு அறிவிப்பு.!
2024 ஆம் வருட பொது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலைத் தொடர்ந்து அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அதிமுக கட்சியின் சின்னம் லெட்டர் பேட் குடி போன்றவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
இந்தத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் எடப்பாடி பழனிச்சாமி திறப்பு வெற்றி பெற்றது. இந்நிலையில் உரிமை மீட்பு கூட்டம் என்ற பெயரில் எனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் . வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஓபிஎஸ் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என நம்பிக்கையுடனும் தெரிவித்தார்.