"மக்களுக்கான மரியாதைய தரணும்..! போய வாயானு பேசக்கூடாது" கதிர் ஆனந்த் பிரச்சாரத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்..!
18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. கட்சியின் வேட்பாளர்கள் தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் கடந்த ஐந்து ஆண்டுகளாக எம்பி எங்கே போனார் இதுவரை எங்கள் பகுதிக்கு எதுவும் செய்யவில்லை, பாலம் அமைத்தரவில்லை என கேள்வி எழுப்பினர்.
இதனால் பொதுமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ஒருமையில் பேசி இருக்கிறார், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் மற்றொருவர், மக்களுக்கான மரியாதைய தரணும், போய வாயானு பேசக்கூடாது என சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரச்சாரக் கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டு வேட்பாளர் கதிர் ஆனந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பொதுமக்கள் மற்றும் எம்எல்ஏ ஆகியோருக்கு இடையே வாக்குவதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Also Read: BJP-யின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்ட காயத்ரி..!! சர்வே முடிவு எங்கயோ போகுதே..!!