முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”..!! ஆளுநரை சந்தித்து விஜய் மனு..!! அறிக்கை வெளியிட்ட தவெக..!!

TVK General Secretary N. Anand has issued a statement regarding his meeting with Governor R.N. Ravi.
01:28 PM Dec 30, 2024 IST | Chella
Advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அந்த அறிக்கையில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தோம். அந்த மனுவில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை ஆளுநர் பரிசீலிப்பதாக கூறினார்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : ஊழியர்களே..!! உங்கள் பி.எஃப். எங்கு முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா..? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Tags :
vijayஆளுநர் ஆர்.என்.ரவிதவெக அறிக்கை
Advertisement
Next Article