For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”உயிருடன் இருப்பார்கள் என நம்புகிறோம்”..!! நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன..? அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி..!!

The condition of those inside is not certain. We hope they are alive. We have saved many people on various occasions like this.
12:00 PM Dec 02, 2024 IST | Chella
”உயிருடன் இருப்பார்கள் என நம்புகிறோம்”     நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் நிலை என்ன    அமைச்சர் எ வ வேலு பரபரப்பு பேட்டி
Advertisement

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் சிக்கியுள்ளனர்.

Advertisement

இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”4 பெண் குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு பெரியவர் என 7 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயற்சித்து வருகிறது. மாநில மீட்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப்பணியில் இடையூறாக பாறை ஒன்று இருக்கிறது. ஆனால், இப்போது பாறை உடைக்கும் செயலை செய்ய முடியாது. சம்பவ ஐஐடி பேராசிரியர்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். உள்ளே இருபவர்கள் நிலை குறித்து உறுதியாக தெரியவில்லை. உயிருடன் இருப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறான பல்வேறு சமயங்களில் பலரை சில சமயம் காப்பாற்றியுள்ளோம். அதனால், மீட்புப்பணிகளில் நம்பிக்கையுடன் பணிகளை தொடர காத்திருக்கிறோம்.

போதுமான அளவுக்கு மீட்பு பணி வீரர்கள் இருக்கிறார்கள். இது குறுகிய பாதை என்பதால் பெரிய இயந்திரங்களை உபயோகப்படுத்த முடியவில்லை. ஒருவர் உள்ளே போகும்படி தான் வழி இருக்கிறது. ஆட்கள் மூலமாக தான் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Read More : 5 ஏக்கர் நிலம், கார், டிராக்டர் இருந்தும் உரிமைத்தொகை ரூ.1,000 பெறுகிறார்களா..? உடனே புகாரளிக்கலாம்..!!

Tags :
Advertisement