"வேற கட்சி மேட்டர்ல நாங்க தலையிட மாட்டோம்.." - அதிமுக குறித்த கேள்விக்கு அண்ணாமலையின் பதில்.!
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக இடையேயான மோதல் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் தயவு தான் எடப்பாடி பழனிச்சாமி 4.5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவியில் இருந்ததாக தெரிவித்திருந்தார்.
தற்போது பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவது பாஜகவிற்கு அவர் செய்யும் துரோகம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பதிலளித்திருக்கிறார். ஓபிஎஸ் கூறிய கருத்து தொடர்பாக அண்ணாமலை இடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் மற்ற கட்சிகளின் விவகாரங்களில் தலையிடும் பழக்கம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அண்ணாமலை " எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில் நான் பாரதிய ஜனதா கட்சியில் பயணிக்கவில்லை. எனவே அது தொடர்பாக கருத்து தெரிவிப்பது ஏற்புடையதாக இருக்காது என கூறினார். மேலும் ஒரு கட்சியை பற்றி இன்னொரு கட்சி விவரிசிப்பது சரியான முறையில்லை என தெரிவித்த அவர் அந்தக் கட்சியில் பயணித்த ஒருவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அதிமுகவில் பயணித்தவர். அவர் தனது முன்னாள் கட்சியை பற்றி கூறியது ஏற்புடையதாக இருக்கும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் கருத்து கேட்கலாம் எனவும் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் இந்தியாவின் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என்பதை விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். அதற்காக ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்