For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

“2014 க்கு முன் நாடு இருந்த நிலையை மறக்க முடியாது” -பிரதமர் மோடி பேச்சு

03:04 PM Apr 07, 2024 IST | Mari Thangam
“2014 க்கு முன் நாடு இருந்த நிலையை மறக்க முடியாது”  பிரதமர் மோடி பேச்சு
Advertisement

நாடு விடுதலையடைந்த பின், 60 ஆண்டுகளாக செய்ய முடியாதவற்றை 10 ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

பீகார் மாநிலத்தில் இன்று(ஏப். 7) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நாட்டில் இருந்து வறுமையை விரட்டுவதற்காகவே நான் இங்கே நிற்கிறேன். கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய நாட்டின் நிலைமையை என்னால் மறக்க முடியாது. நாட்டின் சாமானிய மக்களில் பலர் குடிசை வீடுகளில் இருந்தனர் அல்லது வீடில்லாமல் இருந்தனர்.

ஏழைகள் சமையல் ஏரிவாயு இணைப்பு இல்லாமல் இருந்தனர். ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனில் இடைத்தரகர்கள் பயனடைந்தனர். நான் வறுமையில் வாழ்ந்திருக்கிறேன். இந்த ஏழை மகன், ஏழைகளின் சேவகன். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் எட்டாத வளர்ச்சியை இந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்துள்ளது.

’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் யாரும் அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. நான் அளித்த வாக்குறுதிகளால் ‘இந்தியா’ கூட்டணி வாயடைத்துப் போயுள்ளது. என்னுடைய நோக்கம் தூய்மையானது என்பதால் வாக்குறுதி அளிக்கிறேன். அதை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறேன். ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவர்கள், இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். தேர்தலில் பொய் சொல்லி வாக்கு சேகரிப்பதில் பெயர் பெற்றவர்கள்” என்று பேசினார்.

Tags :
Advertisement