யார் வீட்டு காசையும் கேட்கல.! எங்க காசு குடுங்க.! மத்திய அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி.!
இந்த மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. இதில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல் மற்றும் உடைமைகளை இழந்தனர் .
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டது மாநில பேரிடர் தான் என்றும் அதனை தேசிய பேரிடராக கருத முடியாது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து பேசி இருக்கும் அவர் எங்களுக்கு சேர வேண்டிய நிதியை தான் நியாயமான முறையில் கேட்டோம். மத்திய அரசிலிருந்து நிதி வழங்கிய பின்னர் எங்களுக்கு மரியாதை குறித்து பாடம் எடுக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் யார் அப்பன் வீட்டுக் காசையும் கேட்கவில்லை நாங்கள் செலுத்திய வரியிலிருந்து எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை தான் கேட்டிருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.