அந்தஸ்து பெற்ற நாம் தமிழர்..!! மீண்டும் தன் வசமாகும் ’விவசாயி’ சின்னம்..!! தேர்தல் அதிகாரி சொன்ன பதில்..!! தம்பிகள் ஹேப்பி..!!
நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டட நிலையில், லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. தற்போது இன்றைய தினம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதனுடன் சேர்த்து விக்கிரவாண்டிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதையடுத்து, தற்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, ஜூன் 21ஆம் தேதி முடிவடைகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு தனி வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்கு இயந்திரங்களை மீண்டும் பயன்படுத்த மாட்டோம்” என்றார்.
அப்போது அவரிடம் நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும் நிலையில், அவர்களுக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சாஹு, "இந்த இரு கட்சிகளுக்கும் எந்த மாதிரியான சின்னத்தை” என்று தெரிவித்தார்.
Read More : BREAKING | அறிகுறியின்றி தாக்கும் ’கள்ளக்கடல்’..!! சுனாமியை விட பயங்கரம்..? 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!