’நாங்க மும்பை போலீஸ் பேசுறோம்’..!! மக்களே உஷார்..!! லட்சக்கணக்கில் பணம் பறிபோகும் அபாயம்..!!
சென்னையில் ஒரே நாளில் 3 பேரிடம் மர்ம கும்பல் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
நாள்தோறும் புதுபுது வகையில் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. காவல்துறை தரப்பில் எவ்வளவு விழிப்புணர்வுகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டாலும், மக்கள் ஏமாந்துதான் வருகின்றனர். அந்த வகையில், ஒரே நாளில் சென்னையில் 3 பேரிடம் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்கள் மும்பை போலீஸ் பேசுகிறோம். உங்களின் செல்போன் எண் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக, TRAI-ல் இருந்து புகார் வந்துள்ளதாக வேளச்சேரியை சேர்ந்த மென்பொறியாளர் குருபிரசாத்தை தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர், உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். அவரும் பயந்து ரூ.95,000 அனுப்பியுள்ளார்.
அதேபோல், தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஆகாஷ் குமார் என்பவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. மேலும், தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி சுஜித் குமார் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து, 1 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் புகார் செய்ததை அடுத்து, இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : ’நீங்கள் சாப்பிடும் உணவுகளால் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் ஆபத்து’..!! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!!