”நாங்கள் பிரிந்து விட்டோம்”..!! கண்கலங்கி மன்னிப்பு கேட்கும் ராஜ்கிரண் மகள்..!! பரபரப்பு வீடியோ..!!
நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. இவர் சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டார். நடிகர் முனிஷ் ராஜா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமானார். மேலும், பெரிய திரையிலும் படங்கள் நடித்துள்ளார். முனிஷ் ராஜா- பிரியா இருவரும் சமூகவலைதளங்கள் மூலம் தான் அறிமுகமானார்கள்.
இருவரும் தங்கள் காதலை திருமணத்திற்கு எடுத்துச் செல்லும் நிலையில்தான் ராஜ்கிரண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விஷயம் இந்த பிரச்சனையில் முன்னிலைப்படுத்தப்பட்டது. நடிகர் ராஜ்கிரணும் தன்னுடைய அதிருப்தியை சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள்தான் என்றும், தன்னை அசிங்கப்படுத்தவே இந்தத் திருமணம் செய்து கொண்டார் எனவும், இனி தன் பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனவும் கடுமையாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராஜ்கிரணின் மகள் பிரியா வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், ”கடந்த 2022ஆம் ஆண்டு நான் முனிஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம். நாங்கள் பிரிந்து சில மாதங்களாகிறது. இந்தத் திருமணம் மூலம் என்னை வளர்த்தவர்களைக் காயப்படுத்தி விட்டேன். ஆனாலும், அவர்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி. அவர்களைக் காயப்படுத்தியத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியுள்ளார்.