’நாங்களும் மனிதர்கள் தான்’..!! ’தவறுகள் நடப்பது சகஜம்தான்’..!! சர்ச்சையை கிளப்பிய தீர்ப்பை திரும்பப் பெற்ற நீதிமன்றம்..!!
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது என கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்பளித்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் தீர்ப்பை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மீது இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 67b படி (குழந்தைகளுக்கு எதிரானவற்றை உருவாக்குதல் பரப்புதல்) சட்டத்தின் படி குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய தீர்ப்பு குறித்து விளக்கம் அளித்த நீதிமன்றம், இங்கு இருப்பவர்கள் அனைவரும் மனிதர்கள் தான். எங்கள் தரப்பிலும் தவறுகள் நடப்பது சகஜம்தான். தவறை திருத்திக்கொள்ள எப்போதும் சந்தர்ப்பம் உள்ளது. தவறாக வாசிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை திரும்பப் பெறுவதோடு வழக்கில் புதிய தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : கேஆர்எஸ் அணையில் இருந்து சீறிப்பாய்ந்தது வரும் காவிரி நீர்..!! 77,000 கனஅடி நீர் திறப்பு..!!