ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் அதிக ஐஸ் கட்டி இருக்கா?? அப்போ ஒரு கிண்ணத்தில் இதை மட்டும் வையுங்க...
பொதுவாக ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில், ஐஸ் கெட்டியாக உறைந்து விடும். இதனால் ஃப்ரீசரில் மற்ற பொருள்களை வைக்க முடியாது. இப்படி ஃப்ரீசரில் படிந்து இருக்கும் ஐஸ் கட்டியை அவ்வளவு சுலபமாக சுத்தப்படுத்த முடியாது. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பயன்படுத்தினால் நீங்கள் சுலபமாக ஐஸ் கட்டிகளை கரைத்து, ஃப்ரீசரை சுத்தம் செய்து விடலாம். இப்படி ஃப்ரீசரை சுத்தம் செய்ய முதலில், 2 மணி நேரத்திற்கு முன்பாக பிரிட்ஜை ஆஃப் செய்துவிட வேண்டும். இதனால் கெட்டியாக படிந்துள்ள ஐஸ் கட்டிகளை சுலபமாக கைகளால் அகற்றி விடலாம். இதற்க்கு பதிலாக, நீங்கள் கூர்மையான பொருள்களை வைத்து ஐஸ் கட்டிகளை அகற்ற முயன்றால், ஃப்ரிட்ஜ் சேதமாகி விடும்.
இப்படி ஐஸ் கட்டிகளை அகற்றிய பின்னர், ஒரு துணியை எடுத்து ஃப்ரீசரை நன்கு துடைக்க வேண்டும். பின்னர், ஒரு துணியில் தூள் உப்பு போட்டு, அதை கொண்டு ஃப்ரீசரை மீண்டும் துடைக்க வேண்டும். பின்னர், ஒஇப்போது, ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக கல் உப்பு போட்டு, ஃப்ரீசரின் ஓரத்தில் வைத்து விடுங்கள். இப்படி செய்வதால், பிரீசரில் ஐஸ் கட்டிகள் உருவாவதை தடுக்க முடியும். இந்த முறையை பின் பற்றி, நீங்கள் ஃப்ரீசரை எளிமையாக சுத்தப்படுத்தி விடலாம்.
Read more: ஒரு மாசம் வர்ற கேஸ் 2 மாசம் வரணுமா?? அப்போ இதை மட்டும் செய்யுங்க…