இனி இதை கடையில் வாங்க வேண்டாம்.. டைல்ஸை பளிச்சிட செய்யும் மேஜிக் லிக்விடை வீட்டிலேயே செய்யலாம்..
ஒரு வீட்டை சுத்தமாக வைப்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் குறிப்பாக டைல்ஸ் வீட்டை சுத்தம் செய்வது மிகவும் கடினமான ஒன்று. ஒவ்வொரு டைல்ஸில் இருக்கும் கரைகளை பார்த்து பார்த்து தேய்ப்பதற்குள் ஒரு நாளே முடிந்து விடும். டைல்ஸில் இருக்கும் பிடிவாதமான அழுக்குகளை நீக்குவது மிக மிக கடினமான ஒன்று. இத்தனை கடினமான வேலையை சுலபமாக செய்து விடலாம் அதுவும் குறைந்த செலவில் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், எத்தனை கடினமான அழுக்குகளையும், கறைகளையும் சுலபமாக நீக்கி டைல்ஸை புதிது போன்று பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் மேஜிக் லிக்விடை இனி வீட்டிலேயே செய்யலாம்.. மேஜிக் லிக்விட் எப்படி செய்வதென்று தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...
பாதியளவு தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கலந்துவிடுங்கள். இப்போது இந்த கலவையில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் எலுமிச்சை தோலை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது இந்த பேஸ்டை எலுமிச்சை சாறு கலந்த நீரில் சேர்த்து விடுங்கள். இப்போது டைல்ஸை பளிச்சிட செய்யும் மேஜிக் லிக்விட் ரெடி.. இதை கொண்டு டைல்ஸை துடைத்தால் கறைகள் நீங்கி புதியது போன்று டைல்ஸ் பளிச்சிடும். அல்லது, 25 மில்லி வெள்ளை வினிகர் மற்றும் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து டைல்ஸை துடைத்தாலும் அழுக்கு கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
உங்களிடம் வினிகர் இல்லையென்றால் கவலை வேண்டாம், நம் வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருள்களை வைத்தும் மேஜிக் லிக்விட் செய்யலாம். ஆம், இதற்க்கு முதலில் பிளாஸ்டிக் வாலியில் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து, பின்னர் அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து விடுங்கள். இப்போது இந்த வாலியில் வெந்நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை கொண்டு டைல்ஸை துடைத்தால் கறைகள் நீங்கி புதியது போன்று பளிச்சிடும்.