தொடைக்கு இடையில் உள்ள படர்தாமரை உங்களை பாடாய் படுத்துகிறதா? மூன்றே நாளில் குணமாக சூப்பர் டிப்ஸ்..
வேலைக்கு செல்லும் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது படர்தாமரை தான். படர்தாமரை எல்லாம் ஒரு பிரச்சனையா என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் படர்தாமரை வந்தவர்களுக்கு மட்டும் தான் அதன் அவஸ்தை புரியும். இந்த பிரச்சனை பெண்களை விட ஆண்களையே அதிகம் பதிக்கிறது. பாடாய் படுத்தி விடும் இந்த படர்தாமரை உருவாவதற்கு, கிட்டத்தட்ட 40 வகையான பூஞ்சை காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்ட இந்த படர்தாமரை உள்ளவர்கள், கட்டாயம் தங்களின் உள்ளாடைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உள்ளாடைகள் மட்டும் இல்லாமல், போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் நீங்கள், துணி துவைக்க அதிக வாசனை மிகுந்த சோப்பை பயன்படுத்தக் கூடாது. ஒரு வேலை உங்களுக்கு இந்த படர்தாமரை பிரச்சனை அதிகம் இருந்தால், நீங்கள் வீட்டு வைத்தியத்திலேயே சுலபமாக குணமாக்கி விடலாம். இதற்க்கு பெரிய செலவுகள் ஒன்றும் இல்லை. வெறும் பூண்டு இருந்தால் போதும்..
இதற்க்கு நீங்கள், சில பூண்டுகளை நன்றாக அரைத்து அதன் சாறை பிழிந்து சுமார் 3 சொட்டுகள் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலக்கி விடுங்கள். இப்போது இந்த கலவையை படர்தாமரை உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், வெறும் மூன்றே நாள்களில் குணமாகி விடும்.
Read more: வறண்டு போன உங்கள் பாதங்களை ஒரே இரவில் மென்மையாக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்..