உஷார்!! வெஜிடபிள் கட்டிங் போர்டை இப்படி தான் சுத்தம் செய்ய வேண்டும்.. இல்லையென்றால் வரும் ஆபத்து..
தற்போதெல்லாம் காய்கறிகளை வெட்ட, இறைச்சிகளை வெட்ட காய்கறிகள் வெட்ட கத்தி மற்றும் கட்டிங் போர்டைத் தான் பயன்படுத்துகின்றனர். அரிவாள்மனையை பயன்படுத்தும் பழக்கம் பெரும்பாலும் குறைந்து விட்டது. அப்படி நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டிங் போர்டை பலர் சுத்தம் செய்வதில்லை. மற்ற பாத்திரங்களை சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவும் நாம் கட்டிங் போர்டை வெறும் தண்ணியில் மட்டும் கழுவுகிறோம். இப்படி கட்டிங் போர்டை சுத்தமாக வைக்கவில்லை என்றால் அவற்றில் பாக்டீரியாக்கள் தேங்கி நோய்த் தொற்று ஏற்படும்.
பொதுவாக பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகளை விட மரத்தால் ஆன கட்டிங் போர்டுகள் தான் நல்லது. ஏனெனில், பிளாஸ்டிக் கட்டிங் போர்டுகளில் விழும் கீறல்களால் பிளாஸ்டிக் துணுக்குகள் காய்கறிகளில் சேர்ந்து உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதே சமையம் மர கட்டிங் போர்டுகளை சரியாக பராமரிக்கவில்லை என்றால் போர்டில் உள்ள மூலம் மரத்துகள்கள் உணவில் கலக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த வகையில் மர கட்டிங் போர்டை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் மரத்தால் ஆன கட்டிங் போர்டை பயன்படுத்தினால், அதனை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பதை தவிர்க்கவும். ஒரு வேலை உங்கள் மர கட்டிங் போர்டு எப்போதும் ஈரமாகவே இருந்தால், சில நாட்களிலேயே அதில் விரிசல் ஏற்படும். மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அவற்றில் தங்கிவிடும். மரத்தில் செய்யப்பட்ட கட்டிங் போர்டுகளை பயன்படுத்தியவுடன் சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு அதனை நன்றாகக் கழுவவும். பின்னர் மெல்லிய காட்டன் துணி கொண்டு அதனை நன்றாக துடைத்து, வெயில் படும் இடத்தில் வைத்து காய வைக்க வேண்டும். இப்படி செய்வதால் கிருமிகள் சேர்வது தடுக்கப்படும்.
மேலும் வாரம் ஒரு முறையாவது போர்டை சுத்தம் செய்து அதில் எண்ணெய் பூசி காயவிடவும். இதனால் மரப்பலகையில் பூச்சிகள் அரிக்காமலும், விரிசல் விழாமலும் இருக்கும். மேலும், காய்கறி, பழங்கள் மற்றும் இறைச்சிகளை நறுக்க ஒரே கட்டிங் போர்டை பயன்படுத்தக்கூடாது. காய்கறிகள் நறுக்கிய பிறகு வெதுவெதுப்பான நீரில் கட்டிங் போர்டை நன்றாகக் கழுவ வேண்டும்.
Read more: கொண்டைக்கடலை நல்லது தான், ஆனால் இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது..