முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வயநாடு நிலச்சரிவு..!! இதுவரை 370 பேர் உயிரிழப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

It has been officially announced that 370 people have died in the Wayanad landslide so far.
07:46 PM Aug 04, 2024 IST | Chella
Advertisement

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கிய நிலையில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆறாவது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவக் குழுக்கள் 500-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

மலை உச்சியில் குகைகளில் சிக்கிக் கொண்ட பழங்குடி மக்களை கேரளா மாநில வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். 4 பழங்குடி குழந்தைகள் உட்பட 6 பழங்குடியினரை கையிறுகள் மூலம் மலையேற்றத்தில் ஈடுபட்டு பத்திரமாக மீட்டனர். குழந்தைகளை தங்களது உடல்களில் கட்டிக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’என் கணவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்’..!! ’அந்த சம்பவத்தை மறக்கவே முடியாது’..!! நாஞ்சில் விஜயன் மனைவியால் பரபரப்பு..!!

Tags :
KeralawayanadWayanad Landslide
Advertisement
Next Article