நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு... உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு...!
வயநாடு நிலச்சரிவில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது.
நிலச்சரிவில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்றும் இன்றும், கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளனது. தற்போது தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள், மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.