வயநாடு நிலச்சரிவு!. அமித் ஷா VS பிரனாயி விஜயன்!. குறைச்சொல்ல நேரம் இதுவல்ல!.
Pranai Vijayan: ஜூலை 23-ம் தேதி கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரள அரசுக்கு மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும் மூன்று நாட்களுக்கு எச்சரிக்கைகள் தொடரும் என்றும், ஜூலை 26 ஆம் தேதி, 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்து உள்ளது. மண் சரிவு சேறும் சகதியுமாக இருக்கும் என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றும் எச்சரித்ததாக உள்துறை அமைச்சர் கூறினார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்திய அரசின் வானிலை எச்சரிக்கை அமைப்பு குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். தயவுசெய்து மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையைப் படியுங்கள்" என்று கூறினார்.
மத்திய அரசின் எச்சரிக்கையை பல மாநில அரசுகள் பின்பற்றியதால், பேரிடர் மேலாண்மையில் உயிர்ச்சேதம் இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்தார். “ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, சுமார் ஏழு நாட்களுக்கு முன்னதாகவே புயல் குறித்த எச்சரிக்கையை அனுப்பியிருந்தோம், துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார். புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்ற எச்சரிக்கை குஜராத் அரசுக்கு அனுப்பினோம். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
2014-க்குப் பிறகு இந்திய அரசு முன்கூட்டிய வானிலை எச்சரிக்கை அமைப்பைக் கொண்டுள்ளது என்றும், அதற்காக ரூ. 2000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டு, இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்படும். மழை, வெப்பம், புயல், மின்னல் போன்றவற்றுக்கும் உரிய எச்சரிக்கை அமைப்பு உள்ளது என்று அமித்ஷா கூறினார்.
நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜூலை 23 அன்று ஒன்பது NDRF குழுக்கள் மையத்தால் அனுப்பப்பட்டன. கேரள அரசு என்ன செய்தது? கேரள அரசு ஏன் மக்களை வெளியேற்றவில்லை? என அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பைவிட எத்தனையோ அதிகம் மில்லிமீட்டர் மழைபெய்துள்ளது. நிலச்சரிவு ஏற்படும் முன்பு ஒருமுறைக்கூட அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் வழங்கவில்லை. நிலச்சரிவு நடந்த பிறகு காலை 6 மணியளவில் அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது' என்றார் பினராயி விஜயன்.
மத்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் அனைத்து முன்னறிவிப்புகளையும் கேரளா கடைபிடித்து வருகிறது. மாறி மாறி குற்றச்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. இப்படி ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது, கேரளா என்ன செய்தது என மத்திய உள்த்துறை அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார். இங்குள்ள உண்மை நிலை உங்கள் அனைவருக்கும் தெரியும்.
நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் அந்த சமயத்தில் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆரஞ்ச் அலர்ட் என்றால் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டருக்கு இடைப்பட்ட அளவில் மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால், முதல் 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் 372 மில்லி மீட்டர் மழைய பெய்தது. 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
Readmore: வீட்டில் விளக்கேற்றுவதால் இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குமா..? சரியான நேரம் எது..?