தண்ணீர் மூலம் பரவும் காய்ச்சல்..!! குழந்தைகளை தான் அதிகம் பாதிக்குமாம்..!! பெற்றோர்களே இதையெல்லாம் பண்ணுங்க..!!
குழந்தைகளுக்கும் சரி, ஏற்கனவே உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் சரி, காய்ச்சல் என்பது ஆபத்தானது. குறிப்பாக, மழைக்காலத்தில் காய்ச்சல் பலருக்கும் வரக்கூடியதாக இருக்கிறது. இதனால் என்ன நடக்கும்..? மருத்துவக் கண்ணோட்டத்தில் இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
மழைக்காலம் குழந்தைகளை பல தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகிறது. ஏனென்றால், நீர் மற்றும் ஈரமான சூழலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு அவர்கள் எளிதாக தாக்கப்படுகிறார்கள். பொதுவான காய்ச்சல் நோய்களில் வைரஸ் காய்ச்சல்கள் (ஃப்ளூ மற்றும் டெங்கு போன்றவை), பாக்டீரியா தொற்றுகள் (டைபாய்டு மற்றும் சுவாசக்குழாய் தொற்று போன்றவை) டைபாய்டு, வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) போன்ற நீர்வழி நோய்கள் ஆகியவை அடங்கும்.
குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், அவர்களுக்கு வலி, பசியின்மை, எரிச்சல் மற்றும் நீரிழப்பு போன்றவை ஏற்படலாம். சில தீவிரமான சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட வகையான நோய்த்தொற்றுகள் விரைவாக பரவக்கூடும். இதற்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒருவேளை தொடர்ச்சியான அல்லது மோசமான காய்ச்சலாக இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் :
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மழைக்காலத்தில் அதிக ஆபத்துக்குரியவர்களாக உள்ளனர். இந்த குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை பலவகை நோய்களுக்கு, குறிப்பாக சுவாசக் கோளாறுகள் மற்றும் நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது.
சுகாதாரம் : அடிக்கடி கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நோய்த்தொற்றுகளைத் தடுக்க அவர்களின் உடலை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
தடுப்பூசி : தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்து வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான நோய்த்தடுப்பு ஊசிகள் போடுவது. உதாரணமாக, ஃப்ளூ தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பான குடிநீர் : தண்ணீரை அப்படியே ஒருபோதும் உட்கொள்ள வேண்டாம். ஏனென்றால், தண்ணீரால் பரவும் நோய்கள் வரும் ஆபத்து அதிகம் உள்ளது.
கொசுக் கட்டுப்பாடு : டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவாமல் இருக்க தண்ணீர் தேங்கும் நீரூற்றுகள், டயர்கள் மற்றும் இதர பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மருத்துவ ஆலோசனை : உங்களின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ, சுவாசிப்பதில் சிரமம் இருந்தாலோ, நிற்காமல் தொடர்ச்சியாக இருமல் இருந்தாலோ உடனே மருத்துவ உதவியை நாடுங்கள்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயம் என்னவென்றால், நல்ல சுகாதாரத்தை பேண வேண்டும். முன்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் பிற தொடர்புடைய நோய்களிலிருந்து காப்பாற்ற தடுப்பு நடவடிக்கைகளைக் மேற்கொள்வது அவசியமாகும்.
Read More : எந்த மாநிலத்தில் அதிக அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள் தெரியுமா..? தமிழ்நாட்டிற்கு எந்த இடம்..?