மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு..!! விவசாயிகள் மகிழ்ச்சி..!!
மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீா் திறக்கப்படவுள்ளது.
மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கா் நிலமும், நாமக்கல்லில் 11,337 ஏக்கா் நிலமும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கா் நிலம் என மொத்தம் 45,000 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. கிழக்குக் கரை கால்வாயில் 27,000 ஏக்கரும், மேற்குக் கரை கால்வாயில் 18,000 ஏக்கர் நிலங்களும் பயன் பெறுகின்றன. இந்த கால்வாய்ப் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிச.15 ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு தண்ணீா் திறக்கப்படும்.
நடப்பாண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருப்பதால் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே, அதாவது இன்று (ஜூலை 30) அணையில் இருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக அணையின் வலது கரை பகுதியில் உள்ள தலைக்கால்வாய் மதகுகளை உயா்த்தி ஆரம்பத்தில் 200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படும். பின்னா் தேவைக்கேற்ப தண்ணீா் திறப்பது அதிகரிக்கப்படும்.
Read More : வசூலிலும் பட்டையை கிளப்பும் ராயன்..!! ரூ.100 கோடி..!! உற்சாகத்தில் படக்குழு..!!