For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Watch Video | இருசக்கர வாகனத்தில் ஆபாச நடனம்..!! சர்ச்சைக்குள்ளான வைரல் வீடியோ..!!

02:26 PM Mar 27, 2024 IST | Chella
watch video   இருசக்கர வாகனத்தில் ஆபாச நடனம்     சர்ச்சைக்குள்ளான வைரல் வீடியோ
Advertisement

ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், இளம்பெண்கள் வெளியிட்ட ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் (25.03.2024) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தங்களது சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்தனர். அந்த வகையில், இளம்பெண்களின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, இரண்டு பெண்கள் வாகனத்தில் எதிரெதிரே அமர்ந்துக்கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை செய்கின்றனர். இந்நிலையில், சாலையில் ஆபத்தான முறையில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துக்கொண்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பெண்கள் அமர்ந்து நடனமாடிய இருசக்கர வாகனத்திற்கு நொய்டா போலீஸ் ரூ.33,000 அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், வாகனத்திற்கு மட்டும் அபராதம் விதித்த நிலையில், சம்மந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More : Summer | பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

Advertisement