For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Watch Video | நயன்தாராவை பார்த்ததும் உருகிய ஐஸ்கிரீம்..!! ரசிகைக்கு செம சர்ப்ரைஸ்..!! வைரல் வீடியோ..!!

05:37 PM Apr 05, 2024 IST | Chella
watch video   நயன்தாராவை பார்த்ததும் உருகிய ஐஸ்கிரீம்     ரசிகைக்கு செம சர்ப்ரைஸ்     வைரல் வீடியோ
Advertisement

ஜஸ்கிரீம் கடை ஒன்றின் எதிரே இருந்த நகைக்கடையில் ரசிகை ஒருவர் நயன்தாராவின் புகைப்படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, அவருக்கு அருகிலேயே நயன்தாரா நேரில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

Advertisement

பெரிய திரையிலும் போஸ்டரிலும் பார்த்து ரசித்த தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் திடீரென நேரில் வந்தால் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். அப்படியான ஒரு சர்ப்ரைஸைதான் நடிகை நயன்தாரா கேரளாவில் உள்ள தன்னுடைய ரசிகை ஒருவருக்குக் கொடுத்துள்ளார். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே எதிரில், பிரபல நகைக்கடை ஒன்றின் மாடலாக நயன்தாரா இருக்கும் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த ரசிகை.

அவர் அருகில் இருப்பவர், "நயன்தாராவை நேரில் பார்க்க வேண்டுமா?" என்று கேட்டுக் கொண்டே அந்த ரசிகையை திரும்பி பார்க்க சொல்கிறார். அங்கு அந்த ரசிகை அருகிலேயே நயன்தாரா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டு நிற்கிறார். இதைப் பார்த்து ஆச்சரியமைடைந்த ரசிகை நிஜமாகவே நயன்தாராதான் வந்திருக்கிறாரா என அவரைச் சுற்றிப் பார்க்க, நயன்தாரா சிரித்துக் கொண்டே அவரைச் செல்லமாக அடிக்கிறார்.

"இதை நான் எதிர்பார்க்கவே இல்லை" என நயனிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அந்த ரசிகை. இந்த வீடியோவை நயன்தாரா ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்தில் தனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கணவர் விக்கி மற்றும் குழந்தைகள் உயிர், உலக்குடன் கேரளா சென்றிருந்தார் நயன்தாரா. அங்குதான் இந்த சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

Read More : என்ன பண்ணாலும் கார் ஏசி கூலிங் ஆகலையா..? இதை மட்டும் பண்ணுங்க..!! கொடைக்கானலில் இருப்பது போல் உணரலாம்..!!

Advertisement