For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா ஈரான் அதிபர்? பகீர் கிளப்பும் பின்ணணி!!அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!!

06:30 AM May 21, 2024 IST | Baskar
திட்டமிட்டு கொல்லப்பட்டாரா ஈரான் அதிபர்  பகீர் கிளப்பும் பின்ணணி  அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி
Advertisement

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisement

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதா எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் குறிப்பாக இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியிருப்பதும், ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியிருப்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனாலேயே, இது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா? எனச் சர்வதேச தரப்பில் கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில், இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.மேலும், மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், 3 ஹெலிகாப்டர்கள் பயணித்த நிலையில் அதிபர் இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால் அதுகுறித்தும் காரணங்கள் சொல்லப்படுகிறது. அவர் பயணித்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும் அது பழைய ஹெலிகாப்டர் என்றும் சொல்லப்படுகிறது.

இப்ராகிம் ரைசிக்கு ஈரானிலேயே எதிரிகளின் நீண்ட பட்டியல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் பலரே எதிரிகளாக இருப்பதாகவும், அவர்களிடமிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், உள்நாட்டு எதிரிகளே அவரைக் கொல்வதற்கு முயற்சித்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.மேலும், 1988-ல் ஆயிரக்கணக்கானோரின் மரண தண்டனைகளை மேற்பார்வையிடும் ஈரானின் உச்ச தலைவரின் கடினப் பாதுகாவலராக இப்ராகிம் ரைசி இருந்ததாகவும், அதனாலேயே அவர், ’தெஹ்ரானின் கசாப்புக்கடைக்காரர்’ என அழைக்கப்பட்டதாகவும், இதனாலேயே அவருக்கு எதிரிகள் அதிகமானதாகவும் சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read More: ஈரான் அதிபரின் மரணம் : இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு..!

Advertisement