For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட்..!! தலைமறைவான நித்தியானந்தா..!! நீதித்துறைக்கே சவாலா..? கடுப்பான நீதிபதி..!!

The judge condemned Nithyananda for being in hiding and challenging the judiciary.
04:31 PM Oct 22, 2024 IST | Chella
பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட்     தலைமறைவான நித்தியானந்தா     நீதித்துறைக்கே சவாலா    கடுப்பான நீதிபதி
Advertisement

நித்தியானந்தா தலைமறைவாக இருந்துக் கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

நித்யானந்தாவின் பெண் சீடரான கர்நாடகாவைச் சேர்ந்த சுரேகா, நித்தியானந்தாவுக்கு சட்ட ஆலோசகராக உள்ளார். இவர் மீது கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதாவதும் ”தேனி அருகே உள்ள நிலத்தில் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவதாக கூறி சுரேகா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நித்யானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என சுரேகா உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , நித்யானந்தாவின் சீடர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கும் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாக கூறப்பட்டது. அப்போது, சுரேகாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென நித்யானந்தாவின் ஆதரவு வழக்கறிஞர் கூறினார்.

அப்போது கோபமடைந்த நீதிபதி, ”நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. ஆனால், நீதிமன்றத்திற்கு வருவதில்லை. அவர் தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார். முதலில் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லுங்கள் என்று கூறினார்.

மேலும், நித்தியானந்தாவின் சொத்துக்களை, இந்திய நீதிமன்றம் பாதுகாக்க வேண்டுமா எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சுரேகா தரப்பில் எதிர்தரப்பினருக்கு தொந்தரவு ஏதும் கொடுக்க மாட்டேன் என்றும், இட ஆக்கிரமிப்புகளில் ஈடுபட மாட்டேன் என்றும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் முன்ஜாமீன் குறித்து பரீசிலிப்பதாகவும் உயர்நீதிமன்ற கிளை தெரிவித்து, வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

Read More : விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! 30,000 புதிய மின் இணைப்புகள்..!! உங்களுக்கும் கிடைக்கப் போகுது..!! மின்வாரியத்திற்கு பறந்த உத்தரவு..!!

Tags :
Advertisement