Xiaomi போன் பயனர்களுக்கு எச்சரிக்கை! உடனே இந்த ஆப்பை டெலிட் செய்யவும்.. இல்லனா?
பயனர்களுக்கு ஒரு புதிய மால்வேர் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் செக்யூரிட்டி அலெர்ட் ஆனது மைக்ரோசாப்ட் டீம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்மாட்போனின் முழு கட்டுப்பாட்டையும் ஹேக்கர்களுக்கு வழங்கும் ஒரு புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. செக்யூரிட்டி ஆய்வாளர்கள் இந்த மால்வேரை டர்ட்டி ஸ்ட்ரீம் என்று அழைக்கின்றனர். இது மைக்ரோசாப்ட் பிளே ஸ்டோரில் உள்ள சில ஆப்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த மால்வேரை கொண்ட ஆப்கள் இதுவரை 4 பில்லியன் இன்ஸ்ட்டாலேஷன்களை கொண்டுள்ளது. இது உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையாகும். இந்த மால்வேரால் குறிப்பாக இரண்டு ஆப்கள் குறிவைக்கப்படுகின்றன என்றும் மைக்ரோசாப்ட் டீம் சுட்டிக்காட்டியுள்ளது,
அவற்றில் ஒன்று ஷாவ்மீயின் ஃபைல் மேனேஜர் ஆப் . இது 1 பில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்ட்டாலேஷன்களை பெற்றுள்ளது. அடுத்ததாக டபுள்யூபிஎஸ் ஆபிஸ், இது 500 மில்லியன் இன்ஸ்ட்டாலேஷன்களை கண்டுள்ளது. இந்த ஆப்களை முடிந்தவரை உடனடியாக நீக்கும்படி மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் இவ்விரு ஆப்களையும் லேட்டஸ்ட் வெர்ஷனை ஆவது அப்டேட் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஃபைனான்ஷியல் ஆப்களை அணுகுவதன் மூலம் ஐடி, பாஸ்வேர்ட் உட்பட பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் திறன்களை கொண்ட 3 மால்வேர் ஆப்கள் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
உங்களுடைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற மால்வேர் ஆப்களின் நுழைவை தடுக்க சில விஷயங்களை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதலாவதாக.. அதிக எண்ணிக்கையிலான டவுன்லோட்ஸ் மற்றும் ரிவ்யூஸ் இல்லாத ஆப்களை தவிர்த்து விடவும். அவைகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
மேலும், எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கிறதா? அன்இன்ஸ்டால் செய்து விடவும். ஏனெனில் பிற ஆப்களை ஈர்க்கும் திறன் கொண்ட மால்வேர் ஆப்கள் தான் எக்கச்சக்கமான பெர்மிஷன்களை கேட்கும். கடைசியாக, கூகுள் பிளே ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான இடம் தான். ஆனாலும் அவ்வப்போது, திட்டமிடுவது போல் விஷயங்கள் நடப்பதில்லை, எனவே நீங்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம்.