முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை..!! அடுத்த 5 நாட்களுக்கு உஷார்..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

04:45 PM Apr 24, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் மிகக் கடுமையான வெப்ப அலை பரவ கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஒடிசாவிலும், ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்திலும் பரவி வரும் வெப்ப அலை தென்னிந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் தொடக்கத்திற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் காலை முதலே அதிக வெயில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர். மேலும், வெயில் மரணங்களும் அதிகரித்துள்ளது. தினமும் 30 முதல் 35 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை உள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டிலும் 5 நாட்கள் வெப்ப அலை பரவுவதோடு, வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளான மேற்கு வங்கம், கர்நாடகா, ஒடிசா, தமிழகம், பீகார், சிக்கிம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். கடலோர ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கோவா, கேரளா, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலைகளால் உண்டாகும் காற்றின் ஈரப்பதம் அசௌகரியத்தை உண்டாக்கலாம்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்கியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. எனவே, வெளியில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது தொப்பி மற்றும் குடையை பயன்படுத்துவது அவசியம். இதனால் வெளியில் செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

Read More : ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்துக்களை பறித்துவிடுவார்கள்”..!! பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

Advertisement
Next Article