வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!! இந்த ஆவணங்கள் கையில் இல்லையென்றால்..!! போக்குவரத்துத்துறை அதிரடி..!!
இந்தியா முழுவதும் சமீபகாலமாக பல்வேறு மாநிலங்களில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மீறுவதால், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக பல்வேறு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், வாகன ஓட்டிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 4 ஆவணங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இல்லையென்றால், போக்குவரத்து காவலர்களால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிரைவர் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆர்.சி. எனப்படும் இந்த ரெஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் இருக்க வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி ஆவணம் இருக்க வேண்டும். முக்கியமாக மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.