எச்சரிக்கை!. ஆய்வகத்தில் இருந்து தப்பியோடிய குரங்குகள்!. கதவுகள், ஜன்னல்களை மூடிவைக்க அறிவுறுத்தல்!
Monkey Escapes: அமெரிக்காவின் தென் கரோலினா (South Carolina) மாநிலத்தில் இருக்கும் ஆய்வுக்கூடத்திலிருந்து 43 குரங்குகள் தப்பித்துள்ளன.
யெமசீ (Yemassee) நகரில் Alpha Genesis நிறுவனம் குரங்குகள் மீது ஆய்வுகளை நடத்துகிறது. அதன் ஆய்வு நிலையத்திலிருந்து 'rhesus macaque' வகைக் குரங்குகள் தப்பித்தன. நகரில் வசிப்போரிடம் வீட்டின் கதவுகளையும் சன்னல்களையும் மூடிவைக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குரங்குகளுக்கு உணவு வழங்கி அவற்றைத் தேட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை சமூக ஊடகத்தில் தெரிவித்தது. குரங்குகளைக் கண்டால் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் ஊழியர் கதவைப் பூட்டத் தவறியதால் குரங்குகள் தப்பியதாகக் கூறப்படுகிறது. தப்பித்த அனைத்தும் பெண் குரங்குகள் என்றும் அவை சோதனைக்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவைகள் சுமார் 3.2 கிலோ எடை கொண்டவையாக இருக்கலாம் என்றும் காவல்துறை கூறுகிறது. "எந்தச் சூழ்நிலையிலும் அக்குரங்குகளின் அருகே செல்ல முயற்சிக்க வேண்டாம்," என காவல்துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.
அப்பகுதியில் குரங்குகளைச் சிக்க வைப்பதற்கான பொறிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் "வனவிலங்குகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் தெர்மல்-இமேஜிங் கேமராக்களைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும்," அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: பேட்டிங், பவுலிங்கில் மாஸ் அட்டாக்!. தென்னாப்பிரிக்காவை அலற விட்ட இந்தியா!. ஆரம்பமே அபார வெற்றி!.