உஷார்!… உடலுறுப்புகளை அழிக்கும் நொறுக்குத் தீனிகள்!... மருத்துவர்கள் எச்சரிக்கை !
Junk Foods: குழந்தைகளை கவரும் வகையில் அதிகப்படியான ரசாயனம் மற்றும் நிறமிகள் சேர்த்து விற்பனை செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் மிகவும் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்படும் வகைகள்தான் அதிகம். ‘டெம்ப் பக்கிங்’ என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகளும் அதிகமாக விற்கப்படுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும்.
தொடர்ச்சியாக, இதுபோன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், கொழுப்புச்சத்து, இதயநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்து விடும். மேலும் ஒரே எண்ணெயை திரும்பத்திரும்பப் பயன்படுத்திச் செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு ஐந்து கிராம் உப்புதான் தேவை. சிப்ஸ் போன்ற கொரிக்கும் பண்டங்களால் உப்பின் அளவும் உடலில் அதிகரித்துவிடும்.’
இப்போது உள்ள சூழலில் சாட் மற்றும் பேக்கரி வகைகள் தவிர்க்க முடியாதது. எனவே, வாரத்துக்கு 2 நாட்கள் பப்ஸ், கேக் போன்ற சாட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் குழந்தைகலை கவருவதற்காக நொறுக்குத் தீனிகளில் அதிகப்படியான ரசாயனங்களும், நிறமிகளும் சேர்க்கப்படுவதாகவும், இவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது சருமம் தொடங்கி, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Readmore: காதலில் விழுந்த சுனைனா! காதலரின் கையை பிடித்துக்கொண்டு நியூ போஸ்ட்!