முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Warning | நீங்க கடை வெச்சிருக்கீங்களா..? ஏப்ரலுக்குள் இதை செய்யாவிட்டால் அபராதம்..!!

08:41 AM Mar 14, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ் உள்ள வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் வைக்க விரும்பினால், தமிழில் பெரியதாகவும், அடுத்து ஆங்கிலத்திலும், இறுதியாக விருப்ப மொழியிலும், 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துகள் இடம் பெறவில்லை. கடந்த மாதம், தொழிலாளர் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், வணிகர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், ஏப்ரலுக்குப் பின் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பதையும், அதன்பிறகும் வைக்காவிட்டால் வணிக நிறுவனங்களுக்கான உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் அரசு முடிவெடுத்துள்ளதை மாவட்டந்தோறும் விளக்கி வருகிறோம். என்றாலும் தற்போது ஆன்லைன் வியாபாரத்தால் மளிகை, துணி உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதாகவும், அதனால், புதிதாக பெயர்ப்பலகை வைக்கும் செலவை சமாளிக்க முடியாமல் உள்ளதாகவும் பல வணிகர்கள் கூறினர். மேலும், மே மாதத்தில் வணிகர் சங்க மாநாடு நடக்க உள்ளதால் பலர் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனாலும் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறினர்.

Read More : BREAKING | அம்பேத்கர் சிலையை தகர்க்கப் போவதாக மிரட்டல்..!! தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு..!!

Advertisement
Next Article