எச்சரிக்கை!. 24 மாநிலங்களில் பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!. 300க்கும் மேற்பட்ட பன்றிகள் அழிப்பு!
African swine fever: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ஏஎஸ்எஃப்) வெடித்ததைத் தொடர்ந்து கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சுமார் 310 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடக்கத்தாரன் ஊராட்சியில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் பன்றிகளை அழிப்பதற்கு விரைவு மீட்புக் குழுக்கள் ஜூலை 5ஆம் தேதி அனுப்பப்பட்டன.
2020 மே மாதம் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் முதன்முதலில் பன்றிக் காய்ச்சல் பதிவானது. அதன்பிறகு, இந்த நோய் நாடு முழுவதும் சுமார் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. செயல் திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது' என அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏஎஸ்எஃப் மனிதர்களுக்கு பரவாது.' இருப்பினும், ASF க்கான தடுப்பூசி இல்லாதது விலங்கு நோய்களை நிர்வகிப்பதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
Readmore: மூளையை தின்னும் அமீபா : உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!!