1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்..!! என்ன காரணம்?
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தங்கள் நிறுவனத்தின் பணிபுரியும் 1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் கடந்த 1923 ஆம் ஆண்டு ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் ஜாக் வார்னர் ஆகிய நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள் உருவாகி உள்ளது என்பதும், அவை உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மில்லியன் கணக்கில் வசூலையும் குவித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 2022 இல் டிஸ்கவரி மற்றும் வார்னர்மீடியா இடையேயான இணைப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
என்ன காரணம்?
கொரொனா பெருந்தொற்றுக்கு பிறகு ஸ்ட்ரீமிங் தொழில் துறை மிகவும் மந்த நிலையில் காணப்படுகிறது என்றும் பணவீக்கம், குறைந்த நுகர்வோர் மற்றும் செலவினங்கள் ஆகிய காரணங்களே வார்னர் பிரதர்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு அந்நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
Read more ; செம வாய்ப்பு..! மத்திய ரயில்வேயில் 2,424 காலி பணியிடங்கள்…! எப்படி விண்ணப்பிப்பது…?