முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போர் பதற்றம்!. இந்தியர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

War tension! Notification of emergency numbers for Indians!
05:40 AM Jun 28, 2024 IST | Kokila
Advertisement

Emergency numbers: லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

Advertisement

காஸா மீதான தாக்குதலை முடித்துக் கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் முடிவுக்கு வரவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் இனி லெபனான் எல்லைக்கு நகர இருப்பதாகவும் அவர் குறிப்பிட்ருந்தார். அதன்படி, இஸ்ரேல் ராணுவம் அடுத்து லெபனானுடன் போரிட முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில், லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ராணுவ தளவாடங்களை லெபனான் எல்லைக்கு அருகே குவித்து வருகிறது இஸ்ரேல். லெபனானை விட்டு வெளியேற தயாராக இருக்கும்படியும், லெபனானுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும் தனது குடிமக்களுக்கு அமெரிக்க அரசு ஏற்கனவே அறிவித்தது. தற்போது கனடா, ரஷ்யா, குவைத், நெதர்லாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் லெபனானை விட்டு வெளியேற தங்களது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.

இந்தநிலையில் இந்திய தூதரகமும் லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் அவசர உதவி எண்களையும் அறிவித்துள்ளது. அதன்படி, cons.beirtu@mea.gov.in என்ற மின்னஞ்சலிலோ அல்லது 961-76860128 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: Jio New 5g Plans | ரூ.600 வரை உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்..!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

Tags :
Emergency numbersindiansIsrael-Lebanon War Tensions
Advertisement
Next Article