உச்சக்கட்டத்தில் போர் பதற்றம்!. புதின் போட்ட உத்தரவால் எகிறப்போகும் பெட்ரோல் - டீசல் விலை?
petrol - diesel: உலகில் எங்கு போர் நடந்தாலும் மொத்த பொருளாதாரமும் பாதிப்படைகிறது. அந்தவகையில், உலகின் கச்சா எண்ணெய் அதிகம் கிடைக்கக்கூடிய முதன்மையான நாடுகளுள் ஒன்றாக விளங்கும் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் கச்சா எண்ணெய் இருப்பை வெகுவாக குறைத்து வருகிறது. இதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு 0.3% அதிகரித்து 71.24 டாலர்களாக உள்ளது. அமெரிக்க மேற்கு டெக்ஸாஸ் இடைநிலை கச்சா எண்ணெய்யின் விலை 0.1% அதிகரித்து பீப்பாய்க்கு 67.11 டாலர்களாக உள்ளது. இது தற்போதைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சிறிய அதிகரிப்பு ஆகும். வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தற்போதைக்கு முடிவதுபோல் தெரியவில்லை. சொல்லப் போனால் நாளுக்கு நாள் போர் சூழல் மேலும் பதற்ற நிலையை உருவாக்கி வருகிறது. இதற்கேற்ப, அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய இராணுவத்தினருக்கு அதிபர் விளாடிமிர் புதின் அனுமதி அளித்துள்ளார். அதேபோல், உக்ரைன் இராணுவமும் அமெரிக்காவின் ஆயுதங்களை பெற உள்ளது.
இதனால், உக்ரைனில் இருந்து அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், அதற்கேற்ப ரஷ்ய இராணுவம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு உதவும் வகையில் வடகொரிய படை களத்தில் குதித்துள்ளது. இருப்பினும், ரஷ்ய படைகளை நோக்கி தாக்குதல் நடத்தும்படி உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார். இது உலக கச்சா எண்ணெய் வணிகத்தை பாதிக்கும் என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Readmore: 1,000 நாட்களை எட்டிய போர்!. அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்ட புதின்!. உலக நாடுகள் பதற்றம்!