For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் முகம் பளிச்சென்று ஆகனுமா.? இந்த ஸ்கின் கேர் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.?

05:55 AM Dec 14, 2023 IST | 1newsnationuser4
உங்கள் முகம் பளிச்சென்று  ஆகனுமா   இந்த ஸ்கின் கேர் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Advertisement

ஆண் பெண் இருவருமே அழகான தோற்றத்தையே விரும்புவோம். எனினும் வேலை பளு, உணவு முறைகள், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளால் நமது முகம் பொலிவின்றி வறண்டு போவதோடு முகப்பரு போன்றவை தோன்றும். மேலும் முகத்தில் சுருக்கங்கள் விழுந்து 30 வயதிற்கு மேல் வயதான தோற்றத்தை கொடுக்கும். இதுபோன்ற தொந்தரவுகளில் இருந்து நமது முகத்தை காத்துக் கொள்ளவும் என்றும் 18 வயது போல் முகத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க சில அழகு குறிப்புகளை இங்கே காணலாம்.

Advertisement

முகம் பளபளப்பாக இருப்பதற்கும் சருமம் வறண்டு போகாமல் இருக்கவும் நீர்ச்சத்து அவசியம். எனவே எப்போதும் உடல் நீர் ஏற்றத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நம் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைந்து போகும் போது பெரும்பாலும் சருமம் வறண்டு போகும். இதனால் பழ சாறு மற்றும் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம். மேலும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன் face wash பயன்படுத்துங்கள். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்க உதவுகிறது .

வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதும் சரும அழகிற்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். காலை எழுந்தவுடன் முகத்தை இரண்டு நிமிடம் மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் ரத்த ஓட்டம் தூண்டப்படுவதோடு முகத்தில் இருக்கும் துளைகளின் அளவையும் குறைக்கும். இதன் மூலம் முகம் பொலிவு பெறுவதோடு முகப்பருக்கள் வருவதையும் தடுக்கலாம். சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதும் சரும அழகை பாதுகாப்பதற்கு சிறந்த வழியாகும். அலுவலகத்தில் இருந்தாலும் வீட்டிலிருந்தாலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நமது முகத்தை புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது.

காலை எழுந்தவுடன் பாலில் முகத்தை கழுவுவது ஒரு சிறந்த தோல் பராமரிப்பு முறையாகும். உங்கள் சருமம் எண்ணெய் பிசுபிசுப்புள்ள சருமமாக இருந்தால் காய்ச்சிய பாலிலும் வறண்ட சருமமாக இருந்தால் பச்சை பால் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இது சரும ஆரோக்கியத்தையும் தோல் பராமரிப்பிற்கும் பெரிதும் உதவும். மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படும் ஆர்கானிக் ஃபேஸ் பேக் பயன்படுத்துவதன் மூலமும் முகத்தை பொலிவுடன் வைத்திருக்கலாம்.

Tags :
Advertisement