For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பட்டா, பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளணுமா..? இந்த ஒரு App போதும்.. சீக்கிரமே வேலை முடிஞ்சிடும்..!!

Want to know who owns the deed? Very easy.. Is there so much of village master app..?
10:40 AM Jan 01, 2025 IST | Mari Thangam
பட்டா  பத்திரம் யார் பெயரில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளணுமா    இந்த ஒரு app போதும்   சீக்கிரமே வேலை முடிஞ்சிடும்
Advertisement

ஒரு நிலத்தை விற்பனைக்கு காண்பித்து விட்டு, வேறு ஒரு சர்வே எண்ணை கிரையம் செய்து கொடுக்கும் மோசடி சம்பவங்கள் பல நடந்து கொண்டிருக்கிறது. இந்த மோசடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நில சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அந்தவகையில், சர்வே எண் மூலம் அந்த நிலம் யார் பெயரில் இருக்கிறது, எவ்வளவு பரப்பளவில் இருக்கிறது, அதற்கான வரைப்படம் என அனைத்து விஷயங்களும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு தனி இணையதள வசதி செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

அதன்படி, தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் வில்லேஜ் மாஸ்டர் என்ற இணையதளத்தை அறிமுகம் செய்து உள்ளது. கூகுள் மேப் போன்று அதில் உள்ள வரைபடம் மூலம் நமது வீடு, நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை மிக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். பின்னர் அந்த சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த நிலத்தின் உரிமையாளர், நில அளவுகள் மற்றும் நிலத்தின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மட்டும் பத்திரப்பதிவு துறையின் கணக்கீட்டின் படி சுமார் 446 கோடி சர்வே எண்கள் உள்ளன. அதில் வில்லேஜ் மாஸ்டர் இணையதளத்தில் கிராமப்புறங்களில் இருக்கும் சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்கள் மட்டும் இப்போது கொடுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி வில்லேஜ் மாஸ்டரில் நகர் பகுதி, கிராம பகுதி என தனித்தனியாக பிரித்து காண்பிக்கப்படுகிறது. மேலும் அதில் வன பகுதி, தீவுகள், மலைகள் ஆகிய இடங்கள் குறித்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு சர்வே எண் தெரிந்து இருந்தால் வில்லேஜ் மாஸ்டரின் இடத்தின் எல்லை மற்றும் அருகில் உள்ள இடங்கள் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

தற்போது இந்த வில்லேஜ் மாஸ்டர் இணையத்தில் கிராமங்களில் உள்ள வீடு மற்றும் நிலங்களின் சர்வே எண்ணை மட்டுமே தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. நகர்புறங்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட வில்லை. ஆனால் நகர்புறங்களுக்கும் கொண்டு வந்தால் நில மோசடிகள் என்பது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.

Read more ; அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை.. புத்தாண்டு வாழ்த்து பதிவில் சொன்ன மெசேஜ் என்ன தெரியுமா? 

Tags :
Advertisement