For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏற்றுமதி, இறக்குமதி பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா...? தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி...! முழு விவரம்

Want to know about exports and imports?
08:45 AM Nov 13, 2024 IST | Vignesh
ஏற்றுமதி  இறக்குமதி பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா     தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி     முழு விவரம்
Advertisement

வரும் 27 முதல் 23-ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்ககளையும் குறித்த 3 நாட்கள் பயிற்சி வரும் 21.11.2024 முதல் 23.11.2024 தேதி வரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள், சந்தையின் தேவை. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள். அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், உரிமம் நடைமுறை குறித்த தகவல்கள். ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள். போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

Advertisement

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் பற்றியும் விளக்கப்படும். ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9080130299/ 90806 09808 அரசு சான்றிதழ் வழங்கப்படும். www.editn.in என்ற இணையதளத்தில் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும் ‌

Tags :
Advertisement