வீட்டிலிருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா?… ஆன்லைனில் ரொம்ப சிம்பிள்!
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள உங்களுடைய புகைப்படத்தை மாற்ற விரும்பினால் வீட்டில் உட்கார்ந்து கொண்டே எளிதாக அதை மாற்றலாம். ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை சில நிமிடங்களில் புதுப்பிக்கலாம். அதற்கான படிப்படியான செயல்முறை என்ன என்று இங்கே பார்க்கலாம்.
முதலில் உங்கள் மாநிலத்தின் வாக்காளர் சேவை போர்ட்டலுக்குச் செல்லவும். இங்கே வாக்காளர் பட்டியலில் திருத்தம் என்ற விருப்பம் இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கிருந்து படிவம் 8ஐத் தேர்ந்தெடுத்து, படிவத்தில் கேட்கப்படும் தகவல்களை நிரப்ப வேண்டும். அடுத்து உங்கள் பெயர், புகைப்பட ஐடி போன்ற தகவல்களை உள்ளிடவும். இதற்குப் பிறகு புகைப்படம் என்ற விருப்பம் இருக்கும். அதைத் தேர்ந்தெடுக்கவும். முழு பெயர், முகவரி மற்றும் வாக்காளர் அடையாள எண் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும். அதன் பிறகு, உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் புதிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய முடியும். இதைச் செய்ய உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் இருப்பிடத்தை உள்ளிட வேண்டும். கோரிக்கை தேதியையும் உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் தொலைபேசி எண் அல்லது அஞ்சல் ஐடிக்கு உறுதிப்படுத்தல் செய்தி வரும்.