முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளமையாக ஜொலிக்க!… இந்த புதிய அழகு தெரபியை டிரை பண்ணுங்க!

05:45 AM May 22, 2024 IST | Kokila
Advertisement

Oenotherapy: அனைத்து பெண்களும் தங்கள் முகத்தை (Good Glowing Skin) பிரகாசமாகவும் அழகாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள், குறிப்பாக திருமணம், வீட்டு விசேஷங்களில், அதற்காக பல லோஷன்ஸ், கிரீம்ஸ், காஸ்ட்லி மேக் அப் பொருட்கள் கொண்டு, தங்களை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். பின் நாட்களில் அவை சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்தி அழகையும், சருமத்தையும் பதிப்படையச்செய்யும். எப்போது இயற்கையான முறையில் அழகை பராமரிப்பு மிகவும் சிறந்தது.

Advertisement

ஒயின் ஃபேஷியல், ராப், எக்ஸ்ஃபோலியண்ட், குளியல் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய அழகு சிகிச்சை முறை வந்துள்ளது. அதன் பெயர் ஒயினோதெரபி என்கிறார்கள். இவற்றில் ரெட், ஒயிட் அல்லது ரோஸ் ஒயின், மூலிகைகள், மற்ற எசன்ஷியல் ஆயில்கள் போன்றவற்றை பயன்படுத்தி சருமத்தை சீரமைத்து, முதுமைத் தடுப்பு சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

சிவப்பு திராட்சையின் விதைகள், தோல், இலைகள் ஆகியவற்றில், ஆண்டோசயனோசைட்ஸ், பாலிஃபீனால், பிரோசயனோடல்ஸ் போன்ற உட்பொருள்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின் ஈயைவிட அதிகமான ஆண்டிஆக்சிடண்ட் பண்புகள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒயின்களில் இயற்கையான அழற்சி தடுப்பு உட்பொருள்கள் உள்ளன. கொலாஜன், எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டமைப்பதன் மூலம் முதுமையை ஒயின் தடுப்பதாக கூறப்படுகிறது. இவை சுருக்கங்களை சரிசெய்து, தொங்கும் சருமத்தை மீட்டமைக்க உதவுகின்றன. சருமத்துக்கு இதமளித்து, இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது.

முகத்தை ஸ்டீமிங், கிளென்சிங் செய்த பிறகு, ஒயின், மூலிகைகள், பழங்கள், எசன்ஷியல் ஆயில்களின் கலவை முகத்தில் பூசப்பட்டு மசாஜ் செய்யப்படும். சரும வகையைப் வகையைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படும் ஒயினும் மாறுபடும். இது குறிப்பிட்ட சீசனில் கிடைக்கும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. ஒயின் தயாரிப்பின்போது மீதமான திராட்சை தோல்கள் ஸ்கிரப்பாக பயன்படுத்தப்படும், கூடுதல் பலன்களுக்கு கொஞ்சம் ஒயினும் சேர்க்கப்படும்.

Readmore: PM-WANI வைஃபை திட்டம்!! ரூ.99க்கு 100GB டேட்டாவை வழங்குகிறது!! முழுவிவரம் இதோ!!

Advertisement
Next Article