விண்வெளியில் நடைபயிற்சி!. 5நாட்களில் பூமியை சுற்றி தொழிலதிபர் சாதனை!
Space Walking: விண்வெளியில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் போலாரிஸ் விண்கலத்தில் பயணம் செய்யும் தொழிலதிபர் விண்வெளி நடைபயிற்சி மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் போலாரிஸ் டான் விண்கலம் கடந்த 10ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தொழிலதிபர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் குழுவினர், 5 நாள் பயணமாக பூமியைச் சுற்றி வருகின்றனர். இந்த திட்டத்தின்படி, ஜாரெட் ஐசக்மேன் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார். இதற்காக விண்கலத்தில் இருந்து வெளியேறிய அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டார். கடுமையான வெற்றிடத்தில் இருந்து பாதுகாக்க பிரத்யேக வடிவமைக்கப்பட்டிருந்த ஸ்பேஸ்சூட் உடையில் அவர் பயிற்சி செய்தார். அவரை தொடர்ந்து சாரா கில்லிசும் இதே போல் நடைபயிற்சி செய்தார். இதுவரை 12 நாடுகளின் சார்பில் விண்வெளி வீரர்கள் 263 பேர் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், முதல்முறையாக தனியார் சார்பில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி நடைபயணம் இதுவாகும்.
Readmore: தமிழகமே…! விரைவில் வருகிறது 1.30 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு…! அமைச்சர் குட் நியூஸ்…!