முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாநாட்டில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கு..!! விஜய் முன்னிலையில் இணையும் முக்கிய கட்சி பிரமுகர்கள்..!!

Sources close to him also say that some important people are joining Vijay's political party.
08:47 AM Oct 27, 2024 IST | Chella
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். குறிப்பாக, சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இன்று முக்கியமான சிலர் விஜயின் அரசியல் கட்சியில் இணைக்கப்பட உள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அதாவது, விஜய்யின் கட்சியில் 5 முக்கிய நிர்வாகிகள் இணையவுள்ளனர். ஏ என்ற இனிஷியல் கொண்ட நபரும், இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த இரண்டு நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார்களாம். மாநாட்டில் கட்சியின் கொடி ஏற்றிய பின் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விஜய் கொடி ஏற்றியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பின்வரும் உறுதி மொழியை கடைபிடிக்க உள்ளனர்.

அதன்படி, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற தனிமனிதராகச் செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது. திமுக அதிகம் பயன்படுத்தும் சமூக நீதி என்று வார்த்தையை தனது உறுதிமொழியை விஜய் இணைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தவெக மாநாட்டில் தொண்டர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன..? விஜய் எப்போது பேசுவார்..?

Tags :
அதிமுகதமிழக வெற்றிக் கழகம்திமுகமாநாடுவிஜய்
Advertisement
Next Article