JOB | லட்சத்தில் சம்பளம்.. இந்திய-திபத்திய எல்லை காவல் படையில் வேலை!!
இந்நோ திபெத்திய எல்லைக் காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காண்ஸ்டமில், ஆகிய பதவிகளுக்கு 29 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைமை காண்ஸ்டமில் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ITBP மருத்துவப் பிரிவு பணிக்கான வயது வரம்பு மற்றும் சம்பளம் :
- சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.
- உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.
- தலைமை காண்ஸ்டமில் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 25 வயது வரை இருக்க வேண்டும்.
- சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிலை 6இன் படி, ரூ.35,400 - 1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
- உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிலை 5இன் படி, ரூ.29,200 - 92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.
- தலைமை காண்ஸ்டமில் பணிக்கு நிலை 4இன் படி, ரூ.25,500 - 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
ITBP மருத்துவப் பிரிவு பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு (PET), உடற்திறன் தேர்வு (PST), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நடைமுறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்நோ திபெத்திய எல்லைக் காவல் படையில் மருத்துவப் பரிவில் கீழ் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read more; ’தமிழனை குடிகாரனாக மாற்றியதே கருணாநிதி தான்’..!! ஹெச்.ராஜா கடும் தாக்கு..!!